"தம்பி நாங்களும் டிஜிட்டல் இந்தியா தான்".. யுபிஐ பயன்படுத்தி யாசகம்பெறும் திருநங்கை..!
தம்பி நாங்களும் டிஜிட்டல் இந்தியா தான்.. யுபிஐ பயன்படுத்தி யாசகம்பெறும் திருநங்கை..!
இந்திய பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு பொறுப்பேற்றபின்னர், இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் துரிதமடைந்தன. அதன்பேரில், டிஜிட்டல் இந்தியா எனும் திட்டமானது நாடு முழுவதும் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு, ஆன்லைன் வழி பணப்பரிவர்த்தனை செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்குப்பின் ஆன்லைன் ட்ரான்சாக்ஸன்ஸ் மேற்கொண்டு இந்தியர்கள், அதனை தங்களின் அன்றாட பயன்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர்.
போன் பே வாயிலாக பணம் வசூல்
இந்நிலையில், இரயிலில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வரும் திருநங்கை, தாங்களும் டிஜிட்டல் இந்தியாவுக்கு மாறிவிட்டதை உறுதிசெய்யும் வகையில், கையில் ஸ்மார்ட்போனுடன் போன் பே உதவியுடன் பார் கோட் ஸ்கேன் செய்து யாசகப் பணத்தை பயனரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சாலையில் விழுந்த ராட்சத பாறாங்கல்; மீட்பு படையினருக்கு உதவிய காவலர்.. வைரலாகும் வீடியோ.!
தெருமுனை கடைகள் முதல் பெரிய அளவிலான வணிக வளாகங்கள் வரை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை என்பது இன்றளவில் வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில், திருநங்கையும் டிஜிட்டல் முறைக்கு முன்னேறி இருக்கிறார் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒருசில நொடிகள் தான்.. ஜிம்மில் தொழிலதிபர் மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!