போக வேண்டாம் என கெஞ்சிய மனைவி...அடம்பிடித்த கணவர்.! கடைசியில் நிகழ்ந்த பரிதாபம்.
Do not go, stay home family problem wife in viparitha mudiyuv
சென்னை மதுரவாயல், ஜானகி நகர், முதல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தாமஸ் - எஸ்தர் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தாமஸ் கார் ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஒரு நாள் தாமஸ் தனது மனைவியிடம் மராட்டி வரை செல்ல சவாரி ஒன்று வந்திருப்பதாகவும், சென்று வந்தால் பணம் நிறைய கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். ஆனால் மனைவி அதற்கு ஒப்பு கொள்ளாமல் போக வேண்டாம் என கூறி தடுத்துள்ளார். அதனை அடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது.
இதனால் விரக்தி அடைந்த எஸ்தர் வீட்டில் இருந்த டீசலை ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மனைவி இறந்த செய்தியை கேட்ட கணவரும் தனது குழந்தைகளை நினைத்து பார்க்காமல் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
பின்னர் தாமஸின் உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது தாமஸ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடந்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.