பெண் மருத்துவர் கொலையில் குற்றவாளிகள் குறித்து பரவிய வதந்தி! விளக்கமளித்துள்ள காவல்துறை!!
Doctor murder case accused real names
ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் பாலியல் கொடுமை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகளும் தப்பி செல்ல முயற்சித்தபோது கைதராபாத் போலீசார் அவர்களை என்கவுண்டரில் சுட்டு கொன்றனர்.
இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு குற்றவாளிகளும் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்கள் என்றும், அவர்களால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவ தொடங்கின.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள கைதராபாத் காவல்துறை: குற்றவாளிகளில் ஒருவர் மட்டுமே இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்றும், மற்ற மூன்று பெரும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என்றும் விளக்கமளித்துள்ளது.
மேலும், இந்த கொடூர செயலுக்கு எந்த ஒரு மதத்தின் பெயரையும் காரணமாக கூறவேண்டாம் எனவும் போலீசார் கூறியுள்னனர். கைதுசெய்யப்பட்டு சுட்டு கொல்லப்பட்ட குற்றவாளிகளின் உண்மையான பெயர்கள் பின்வருமாறு: ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன், சின்ன கேஷவலு, முகமது ஆரிப்.