கொரோனோவிற்கு சிகிச்சை! காரையே வீடாக மாற்றிய மருத்துவர்! நெகிழ வைக்கும் சம்பவம்!
Doctor stay in car for done treatment for corono peolple
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவிவருகிறது. மேலும் இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் பரவிய நிலையில் தற்போது 5000க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் 150பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும சமூக விலகலை பின்பற்றவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரவு பகல் பாராமல் மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். மேலும் அவர்கள் தாங்கள் வீட்டிற்கு சென்றால் தங்களது குடும்பங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தங்களது வீடுகளுக்கு செல்வதில்லை. தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்கின்றனர்.
இந்நிலையில் மத்தியபிரதேசம் போபால், ஜேபி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் சச்சின் நாயக் என்ற மருத்துவர் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். அவர் தனது பணிமுடிந்த நிலையிலும், வீட்டிற்கு செல்லாமல் தன்னுடைய காரையே வீடாக மாற்றி தங்கியுள்ளார். மேலும் காரில் தனக்கு தேவையான பொருட்கள், புத்தகங்கள் ஆகியவற்றை வைத்துள்ளார். ஓய்வு நேரத்தில் காரில் புத்தகங்களை படிப்பது, பின்னர் தன்னுடைய குடும்பத்தினருடன் செல்போனில் வீடியோகால் பேசுவது, தூங்குவது என காரிலேயே இருந்துவருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சமீபகாலமாக போபாலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நான் சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு செல்லாமல் காரிலேயே என்னை தனிமை படுத்திக்கொள்ள முடிவுசெய்து தங்கி வருகிறேன் எனக் கூறியுள்ளார்.இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.