மனிதனையும் மிஞ்சிருச்சே.. காட்டிற்கு சென்று வீடு திரும்பாத உரிமையாளர்.! நாய் செய்த நெகிழ்ச்சி காரியம்!!
மனிதனையும் மிஞ்சிருச்சே.. காட்டிற்கு சென்று வீடு திரும்பாத உரிமையாளர்.! நாய் செய்த நெகிழ்ச்சி காரியம்!!
பொதுவாக வீட்டில் நாய்கள், பூனைகள் மிகவும் செல்லமாக வளர்க்கப்படுவது வழக்கம். அதிலும் பெரும்பாலானோர் நாயையே மிகவும் விரும்பி வளர்த்து வருகின்றனர். ஏனெனில் அது மனிதர்களை விட நன்றியுள்ளதாகவும், பாசம் அதிகம் கொண்டதாகவும் இருக்கும்.
கர்நாடகா மாநிலம் ஷிவமோகா மாவட்டம் சுதுரு கிராமத்தில் வசித்து வருபவர் ஷேகரப்பா. இவர் டாமி என்ற நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். ஷேகரப்பா நாள்தோறும் காலை தங்களது கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டிற்குச் சென்று விறகு எடுத்து வருவார். அவ்வாறு அவர் அண்ணையில் விறகு பொறுக்க காட்டிற்குள் சென்றுள்ளார்.
ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இந்த நிலையில் பதறிப்போன அவரது குடும்பத்தினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இந்த நிலையில் நாய் டாமி காட்டிற்குள் சென்று அவரை தேடியுள்ளது. அங்கு அதிக வெயிலின் காரணமாக ஷேகரப்பா மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.
அதனைக் கண்ட நாய் டாமி சத்தமாக குரைத்துக் கொண்டே இருந்துள்ளது. நாயின் சத்தத்தை கேட்ட குடும்பத்தினர்கள் அங்கு சென்று பார்த்தபோது ஷேகரப்பா மயங்கிய நிலையில் விழுந்து கிடந்துள்ளார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு தற்போது நலமுடன் உள்ளார். காட்டில் மயங்கி விழுந்த தனது உரிமையாளரை நாய் டாமி காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.