உள்நாட்டு விமானப் போக்குவரத்து கட்டணங்கள் திடீர் உயர்வு.! எவ்வளவு தெரியுமா.? முழு விவரம்.!
உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு கட்டணங்கள் உயர்வு.
கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், பல்வேறு காரணங்களால் இந்திய விமானச் சேவை கடுமையான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டு வந்தது.
இந்நிலையில் வெளிநாட்டு விமானச் சேவை வர்த்தகம் பாதிக்கப்பட்ட நிலையில், 2020 மே மாதம் முதல் கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்டு உள்நாட்டு விமானச் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தநிலையில், உள்நாட்டு விமானப் போக்குவரத்து கட்டணங்களுக்கான உச்சவரம்பை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கட்டணம் உயருகிறது. உடனடியாக அமலுக்கு வரக்கூடிய இந்தக் கட்டண உயர்வு, மார்ச் 31-ம் தேதி வரையோ அல்லது மறு உத்தரவு வரும் வரையோ நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 40 நிமிடங்களுக்கும் குறைவான பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.2,000-இல் இருந்து ரூ.2,200-ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.6,000-இல் இருந்து 7,800-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் 40-60 நிமிட பயணம், 60-90 நிமிட பயணம், 90-120 நிமிட பயணம், 120-150 நிமிட பயணம், 150-180 நிமிட பயணம், 180-210 நிமிட பயணம் ஆகியவற்றுக்கான கட்டண வரம்பும் உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி 40 முதல் 60 நிமிட பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.2,800 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.9,800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 60 முதல் 90 நிமிட பயணத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.3,300 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.11,700 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 90 முதல் 120 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.3,900 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.13,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
120 முதல் 150 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5,000 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.16,900 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. 150 முதல் 180 நிமிட பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.6,100 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.20,400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 3 மணி முதல் மூன்றரை மணி நேர பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.7,200 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்ச கட்டணம் ரூ.18,600-ல் இருந்து ரூ.24,200 ஆக, அதாவது ரூ.5,600 அதிகரித்துள்ளது.