தாறுமாறாக எகிறிய முருங்கை விலை! விழிபிதுங்கிய இல்லத்தரசிகள்!
drumstick rate increased
சமையலுக்கு அத்தியாவசியமான பொருளான வெங்காய சாகுபடி அதிகமுள்ள மாநிலங்களில் பருவம் தவறிய மழையால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெங்காயத்திற்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை விண்ணை தொடும் அளவுக்கு அதிரடியாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் தக்காளியின் விலையும் சற்று உயர தொடங்கியுள்ள நிலையில் வீட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் முருங்கை காயின் விலையும் தாறுமாறாக ஏறியுள்ளது.
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாகக் காய்கறி சந்தையில் ஒரு கிலோ முருங்கையின் விலையானது ரூ.600 கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
இந்தநிலையில், திருச்சி சந்தையில் முருங்கை வரத்து இல்லாததாலும், இன்று முகூர்த்த நாள் என்பதாலும் ஒரு கிலோ முருங்கை ரூ.650 முதல் 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கை 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய காய்கறி விலை உயர்வால் பலர் உணவகத்தில் சாப்பிடும் பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர்.