குடிபோதையில் ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர்.... பெண்ணின் மீது சிறுநீர் கழித்த அதிர்ச்சி சம்பவம்...!!
குடிபோதையில் ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர்.... பெண்ணின் மீது சிறுநீர் கழித்த அதிர்ச்சி சம்பவம்...!!
பெண் பயணி ஒருவர் மீது குடிபோதையில் சிறுநீர் கழித்த நபரை, விமான பயண தடை பட்டியலில் வைக்க ஏர் இந்தியா நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
நவம்பர் 26-ஆம் தேதி, 2022 அன்று ஏர் இந்தியாவின் வணிக வகுப்பில் பயணம் செய்த ஒருவர் குடிபோதையில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவுக்குப் பிறகு கேபின் விளக்குகள் அணைக்கப்பட்டபோது அந்த நபர் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் பை, காலணிகள் மற்றும் உடைகள் சிறுநீரில் நனைந்துள்ளது.
பைஜாமாக்கள் மற்றும் செருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாகவும், தனது இருக்கைக்குத் திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அந்தப் பெண் கூறினார். பல முதல் வகுப்பு இருக்கைகள் காலியாக இருந்தது என்றும், இருந்தாலும் அவர் ஒரு குழு இருக்கையில் பயணிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் விமான குழுவினர், தரையிறங்கிய பிறகு அந்த நபரை சுதந்திரமாக நடமாட அனுமதித்ததாகவும் அந்த பெண் புகார் கூறியுள்ளார்.
ஜேஎப்கே ஏர் இந்தியா விமானம் அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விமான நிறுவனம் இந்த சம்பவத்தால் ஒரு குழுவை அமைத்து, அந்த பயணி இனி எந்த விமானத்திலும் பயணிக்க முடியாதவாறு தடை செய்ய பரிந்துரைத்துள்ளது. அரசு ஆய்வு குழுவிடம் தற்போது இந்த விவகாரம் உள்ளது. ஏர் இந்தியா அதிகாரி ஒருவர், குழுவின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார். விமான நிறுவனத்தால் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளிவந்த பிறகு, ஏர் இந்தியா என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.