போதையின் உச்சிக்கு சென்ற இளம் பெண்கள்! நடுரோட்டில் செய்த அசிங்கத்தை பாருங்கள்!
Drunken girls fight with police at Mumbai
நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் மனிதனின் பழக்கவழக்கங்கள் மாறிவிட்டன. அதில் ஒன்றுதான் மது அருந்துதல். பள்ளி மாணவர்கள் தொடங்கி, இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் மது அருந்த தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் மது போதையில் செய்வது அறியாமல் தங்களை தடுக்க வந்த காவல் துறை அதிகாரிகளையே அறைந்துள்ளனர் மும்பையை சேர்ந்த பெண்கள். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பையாந்தர் பகுதியில், பார் ஒன்றில் மது அருந்திய 4 இளம்பெண்கள், நடுரோட்டில் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை வேடிக்கை பார்த்த பொதுமக்களை பார்த்து ஆபாசமாகப் பேசியதுடன், மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட நான்கு பெண்களையும் சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் காவலர்களின் பேச்சிற்கு அவர்கள் கட்டுப்படுவதாக தெரியவில்லை. இந்நிலையில் நான்கில் ஒரு பெண் தன்னை சமாதானம் செய்த காவல் துறை அதிகாரியை கன்னத்தில் அறைந்தது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதனை தொடர்ந்து பெண் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு அந்த பெண்களை வேனில் ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த நால்வரும் பெண் காவலர்களுடன் சண்டையிடும், தள்ளு முள்ளில் ஈட்டப்பட்டடுள்ளனர். மேலும் அவர்களை அசிங்கமா திட்டியுமுளன்னர்.
இதனால் வேறு வழியில்லாமல் லத்தியை எடுத்து சுழற்றிய பெண் காவலர் ஒருவர், போதையில் இருந்த நான்கு பெண்களையும் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நான்கு பேரும் மும்பையில் உள்ள கால் சென்டரில் வேலை பார்ப்பவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் ஒருவர் கமலா ஸ்ரீவத்சவா, மம்தா ஐயர், அலிஷா பிள்ளை ஆகியோர் என்பது தெரிந்த நிலையில், வேனில் ஏற்றிய சிறிது நேரத்தில் தப்பியோடிய மற்றொரு இளம் பெண் குறித்து விசாரித்து வருகின்றனர்.