இ-சிகிரெட் விற்பனையை முன்னெடுத்த 15 வெப்சைட்களுக்கு ஆப்பு; மத்திய அரசு அதிரடி நோட்டீஸ்.!
இ-சிகிரெட் விற்பனையை முன்னெடுத்த 15 வெப்சைட்களுக்கு ஆப்பு; மத்திய அரசு அதிரடி நோட்டீஸ்.!
இந்தியாவில் வெளிநாடுகளில் விற்பதை போல ஈ சிகரெட் விற்பனை என்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இவை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய்யப்படுவதும், அதற்கான விளம்பரங்கள் இந்தியாவில் வெளியிடப்படுவதும் நடந்து வந்தது.
இதுதொடர்பான தகவல் மத்திய அரசின் கவனத்திற்கு சென்ற நிலையில், 15-க்கும் மேற்பட்ட இணையதள நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு சம்மன் வழங்கி இருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசின் சட்டப்படி, இந்தியாவில் இ-சிகரெட்டுகள் விற்பனை என்பது தடை செய்யப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதனை வாங்குவதோ, விற்பதோ குற்றம் ஆகும்.
அதேபோல, கடைகளில் விற்பனை செய்யப்படும் சாதாரண சிகிரெட்களை பொதுஇடங்களில் வைத்து குடித்தால், அதுவும் தண்டனைக்குரிய குற்றமே ஆகும்.