#Breaking: இந்தியர்கள் உடனடியாக கியூவ் நகரில் இருந்து வெளியேறுங்கள் - அவசர அறிவிப்பு..!
#BigNews: இந்தியர்கள் உடனடியாக கியூவ் நகரில் இருந்து வெளியேறுங்கள் - அவசர அறிவிப்பு..!
உக்ரைன் நாட்டினை ரஷியா கைப்பற்ற படையெடுத்து சென்றுள்ள நிலையில், 5 நாட்களாக இருநாட்டு படைகளும் சண்டையிட்டு வருகின்றன. உலகளவில் ரஷியாவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி இருந்தாலும், அதனை பொருட்படுத்தாது தொடர்ந்து போரில் முனைப்பு காண்பித்து வருகிறது. பிறநாடுகள் உக்ரைனுக்கு இராணுவ ரீதியான உதவி செய்து, நேரடியாக போர்களத்திற்கு வந்தால் பேரழிவை தருவேன் என்றும் ரஷியா எச்சரித்துள்ளது.
உக்ரைனில் படிப்பு மற்றும் வேலைகளுக்கு என சென்ற 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களில் ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியை இந்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. மேலும், அமைச்சர்கள் தலைமையில் குழுவை உருவாக்கி, அதனை உக்ரைன் நாட்டின் எல்லைக்கும் மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உக்ரைனின் கியூ நகரில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் என அனைவரும் உடனடியாக அந்நகரை விட்டு வெளியேற வேண்டும். நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ள இரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை உபயோகம் செய்து, உடனடியாக அங்கிருந்து வெளியேற கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.