உஷார்..! வாட்ஸ்-ஆப்பில் கொரோனா குறித்து தவறான செய்திகளை பரப்பியதால் அட்மின் உட்பட இருவர் கைது!
Fake news spreader at whatsapp arrested
வாட்ஸ்-ஆப்பில் கொரோனா வைரஸ் குறித்து மக்களை அச்சுறுத்தும் வகையில் தவறான செய்திகளை பரப்பியதால் வாட்ஸ்-ஆப் குரூப் ஒன்றின் அட்மின் மற்றும் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நொய்டா அருகே சோதாப்பூர் கிராமத்தை சேர்ந்த யூசுப் கான் என்ற வழக்கறிஞர் அட்மினாக இருக்கும் வாட்ஸ்-ஆப் குரூப் 'Jai Hind'. இந்த குரூப்பில் சில போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களும் உள்ளனர்.
இந்த குரூப்பில் இருக்கும் பிரோஷ் கான் என்பவர் சமீபத்தில் கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவலினை அந்த வாட்ஸ்-ஆப் குரூப்பில் பகிர்ந்து மற்றவர்களையும் பகிறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த தவறான செய்தி மக்களிடையே பயத்தினை ஏற்படுத்தியதோடு ஒரு வன்முறையையும் தூண்டியுள்ளது.
இதனையடுத்து பிரோஷ் கான் மற்றும் குரூப் அட்மின் யூசுப் கான் இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் தாத்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் மொபைல் போன்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.