வீர மரணம் அடைந்த 44 வீரர்களின் குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம்! பிரபல நடிகர் அறிவிப்பு!
famous actor donate money for died soldier's family
ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் அணிவகுத்து சென்று கொண்டிருந்த இராணுவ வீரர்களின் வாகனத்தில் பயங்கரவாதி ஒருவன் சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான வெடிகுண்டுகளை நிரப்பிய சொகுசு காரை துணை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்களில் ஒன்றை குறிவைத்து வேகமாக மோதினான். அப்போது பலத்த சத்தத்தோடு குண்டுகள் வெடித்து சிதறின. அதில் அந்த பஸ் முற்றிலும் நாசமானது. அத்துடன் வந்த பல வாகனங்களும் சேதம் அடைந்தன. இதில் துணை ராணுவ படையினர் 44 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றனர். வீர மரணம் அடைந்த தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு சார்பாக 20 இலட்சம் நிதி உதவியும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து உயிரிழந்த துணை இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான விஜய் தேவர் கொண்டா அரசின் bravehearts திட்டத்திற்கு தன்னால் முடிந்த உதவியை நிதி உதவி செய்துள்ளார். மேலும் மற்றவர்களும் இதே போல் முன்வந்து வீரர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த அனைத்து சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வழங்குவதாக நடிகர் அமிதாப்பச்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.