லட்சக் கணக்கில் கடன்! செய்வதறியாது மனஉளைச்சலில் இருந்த கூலி தொழிலாளி! ஒரே நாளில் கோடீஸ்வரரான மாபெரும் அதிசயம்!
farmar became a crores person by lottery ticket
கேரளா கண்ணூர் கிராமத்தில் வசித்து வருபவர் பெருண்ணன் ராஜன். 55 வயது நிறைந்த அவர் தினக் கூலி தொழிலாளி ஆவார். இந்நிலையில் ராஜன் தனது மூத்த மகள் ஆதிராவின் திருமணத்திற்காக கடன் வாங்கியிருந்தார். மேலும் தனது வீட்டை புதுப்பிப்பதற்காகவும் அவர் ஏராளமான கடன் வாங்கியிருந்தார்.இந்நிலையில் அவரது கடன் பல லட்சத்தையும் தாண்டி சென்ற நிலையில் அதனை அடைப்பதற்காகவும் நான்காவது முறையாக வங்கியில் லோன் வாங்கவிருந்தார்.
இந்நிலையில் கடன் பிரச்சினையால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த கடந்த மாதம் புத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் சிறப்பாக 300 ரூபாய்க்கு லாட்டரி டிக்கெட் வாங்கியிருந்தார். ஆனால் இதுகுறித்து அவர் யாரிடமும் தெரிவிக்கவில்லை. மேலும் இதுகுறித்து மனைவிக்குத் தெரிந்தால் பணத்தை வீணடித்துவிட்டதாக திட்டுவார் என நினைத்து ரகசியமாக வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் கடன் வாங்குவதற்காக வங்கிக்கு நடந்து சென்றபோது நான் வாங்கிய லாட்டரிடிக்கெட் எண்ணை கடைக்குச் சென்று சரி பார்த்துள்ளார். அப்பொழுது அவருக்கு 12 கோடி பரிசுத் தொகை கிடைத்திருப்பது தெரியவந்தது. இதனால் ராஜன் பெரும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துள்ளார். மேலும் அவரது மனைவி ராஜனியும் ஆச்சரியத்தில் மூழ்கியிருந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ராஜன் மாலூர் சேவை கூட்டுறவு வங்கியில் லாட்டரி ரிக்கெட்டை கொடுத்து பரிசு தொகையை பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை வைத்து கடனை அடைத்து, வீட்டு வேலைகளை முடித்து விடுவேன் எனவும், தனது இளைய மகள் அக்ஷராவை மேற்படிப்பு படிக்க வைப்பேன் எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.