கௌரவ கொலை... 20 வயது பெண்ணுக்கு கோடாரி வெட்டு.!! தந்தை, உறவினர்கள் கைது.!!
கௌரவ கொலை... 20 வயது பெண்ணுக்கு கோடாரி வெட்டு.!! தந்தை, உறவினர்கள் கைது.!!

பீகார் மாநிலத்தில் வேறு சமூக இளைஞரை காதலித்ததால் ஆத்திரமடைந்த தந்தை தனது மகளை வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் இறந்த பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் ராணுவ வீரர்
பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் சிங். இவரது மகள் சாக்ஷி. 20 வயதான சாக்ஷி அங்குள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வந்தார். முகேஷ் சிங் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் கல்லூரியில் படித்து வந்த சாக்ஷி வேறு சமூகத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவரை காதலித்திருக்கிறார். இந்த காதலுக்கு அவரது வீட்டில் பலமான எதிர்ப்பு இருந்து வந்திருக்கிறது.
கோடாரியாள் வெட்டி படுகொலை
தந்தை மற்றும் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி தனது காதலில் உறுதியாக இருந்திருக்கிறார் சாக்ஷி. இதனால் ஆத்திரமடைந்த முகேஷ் சிங் மற்றும் அவரது உறவினர்கள் சாக்ஷியை கோடாரியாள் வெட்டி கொடூரமாக படுகொலை செய்துள்ளனர். இந்த கௌரவக் கொலை பீகார் மாநிலத்தில் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அடக்கொடுமையே... 8-ம் வகுப்பு மாணவிகள் கூட்டு பாலியல் பலாத்காரம்.!! மீன் வியாபாரி கைது.!!
காவல்துறை விசாரணை
இந்தக் கொலையைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இறந்த சாக்ஷியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக முன்னாள் ராணுவ வீரரான முகேஷ் சிங் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அட பாவமே... "இந்த மழலைய கொல்ல எப்படி மனசு வந்துச்சி..." 3 மாத குழந்தை கொலை.!! தாய் வெறி செயல்.!!