அட பாவமே... பெத்த மகளுக்கே பாலியல் தொல்லை.!! தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்.!!
அட பாவமே... பெத்த மகளுக்கே பாலியல் தொல்லை.!! தந்தை மீது பாய்ந்த போக்சோ சட்டம்.!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 வயது சிறுமி, சொந்த தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தந்தையை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை
மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே நகரை சேர்ந்த 42 வயது நபருக்கு திருமணமாகி 6 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக அந்த நபர் தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதனால் குழந்தை கடுமையான மன அழுத்தத்தில் இருந்திருக்கிறது.
காவல் நிலையத்தில் புகார் செய்த தாய்
இந்நிலையில் தந்தையின் கொடுமையை பொறுத்துக் கொள்ள முடியாத குழந்தை, தனக்கு நடந்துவற்றை தாயிடம் கூறி அழுதிருக்கிறது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதையும் படிங்க: பீகாரில் பயங்கரம்... கை, கால்கள் கட்டப்பட்டு இளைஞர் கொலை.!! வைரல் புகைப்படம்.!!
போக்சோ வழக்கில் கைது
இதனைத் தொடர்ந்து புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் குழந்தையின் தந்தையை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து குழந்தை தனது தந்தையால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: அட கொடுமையே... செல்போனை பிடுங்கியாதால் ஆத்திரம்.!! ஆசிரியருக்கு கத்திக்குத்து.!!