அடப்பாவி.. எப்படிதான் மனசு வருதோ.. பெற்ற குழந்தையை பிறந்தவுடன் விற்ற தந்தை..! தாத்தாவின் சந்தேகத்தால் அம்பலமான உண்மை..!!
அடப்பாவி.. எப்படிதான் மனசு வருதோ.. பெற்ற குழந்தையை பிறந்தவுடன் விற்ற தந்தை..! தாத்தாவின் சந்தேகத்தால் அம்பலமான உண்மை..!!
தந்தை ஒருவர் தான் பெற்ற பெண்குழந்தையை பிறந்தவுடன் ரூ.6000-த்திற்கு விற்பனை செய்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த 11-ஆம் தேதி புதன்கிழமையன்று பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில், குழந்தை இறந்துவிட்டதாக குழந்தையின் தந்தை குடும்பத்தினரிடம் கூறி இருக்கிறார்.
ஆனால் அவரது பேச்சில் சந்தேகமடைந்த குழந்தையின் தாத்தா காவல்துறையினரிடம் புகாரளிக்கவே, புகாரை ஏற்ற கோஹ்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திருக்கிடும் திருப்பமாக குழந்தையின் தந்தையே குழந்தையை விற்பனை செய்தது தெரியவந்தது. லக்கிம்பூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் உபாத்யாய் என்பவரிடம் தனது பெண் குழந்தையை 6000 ரூபாய்க்கு தந்தை விற்பனை செய்தது அம்பலமானது.
இதனையடுத்து குழந்தையை பாதுகாப்பாக மீட்ட காவல்துறையினர், கடத்தல் தொடர்பாக குழந்தையின் தந்தை, கிருஷ்ண பிரசாத் உபாத்யாய் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், "மீட்கப்பட்ட குழந்தை தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.