கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.! பரிதாபமாக உயிரிழந்த 13 பேர்.!
மும்பை புறநகரில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகள் 13 பேர் உயிரிழந்
மும்பை புறநகரில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகள் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகவே 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கொரோனாவை கட்டுப்படுத்து அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பாதுகாப்பு இல்லாத நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டம் வாசை என்ற இடத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக அங்கிருந்த நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகள் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.