மகளின் திருமணத்திற்காக 850-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டிய தந்தை! வனத்துறையினரின் வித்தியாசமான தண்டனை!
forest department give different punishment

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்தவர் தஷரத். இவர் தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். இந்தநிலையில் தனது மகளின் திருமண செலவிற்கு பணம் இல்லாமல் கஷ்டத்தில் இருந்துள்ளார். இதனால் தனது சொந்த நிலத்தில் இருந்த 850-க்கு மேற்பட்ட மரங்களை விற்று திருமணம் நடத்தலாம் என முடிவு செய்து தோட்டத்தில் உள்ள மரங்களை வெட்டியுள்ளார்.
ஆனால் தஷரத் வனத்துறையின் அனுமதியின்றி மரங்களை வெட்டி விற்றதாக புகார் அளிக்கப்பட்டது.இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்தனர். மரம் வெட்டியது குறித்து தஷரத் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.