×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதல் விவகாரம்.... சாப்ட்வேர் இன்ஜினியர் காரில் வைத்து எரித்து கொலை...!!

கள்ளக்காதல் விவகாரம்.... சாப்ட்வேர் இன்ஜினியர் காரில் வைத்து எரித்து கொலை...!!

Advertisement

கடந்த 1-ஆம் தேதி நள்ளிரவு, திருப்பதியை அடுத்த, சந்திரகிரி மண்டலம், பொப்புராஜப்பள்ளி கிராமத்தில் மர்மமான முறையில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் எரிந்த காருக்குள் இருந்து ஆண் சடலம் ஒன்றை மீட்டனர். காரின் பின் இருக்கையில் சடலம் இருந்ததால் யாரோ அவரை அடித்து கொலை செய்து காருக்கு தீவைத்து இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர். 

இந்நிலையில், கார் என்ஜினின் சேசிஸ் எண்ணை வைத்து காரின் பதிவெண்ணைக் கண்டுபிடித்து அதை வைத்து காருக்குள் இறந்து கிடந்தவர் வெதுருகுப்பம் மண்டலத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் நாகராஜு (36) என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காதல் பஞ்சாயத்தில் நிகழ்ந்த கொடுமையான சம்பவம் தெரிய வந்தது. நாகராஜனின் சகோதரர் புருஷோத்தம், பொம்மலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ரூபின் என்பவரின் மனைவியுடன் தவறான தொடர்பில் இருந்துள்ளார்.

இந்த கள்ளக்காதல் விவகாரம் குறித்து நாகராஜன் ஊராரிடம் புகார் கூறியதால் ரூபினின் மனைவியை பற்றி வெளியில் தெரிந்ததால்  அவமானமடைந்த ரூபின் நாகராஜு மற்றும் அவரது சகோதரர் புருசோத்தம் மீது ஆத்திரம் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் ரூபின் இந்த கள்ளக் காதல் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நாகராஜுவை அழைத்து அவருக்கு மதுவை ஊற்றிக் கொடுத்துள்ளார். போதையில் மயங்கி தள்ளாடிய நாகராஜுவை அடித்து கொலை செய்த ரூபின், உடலை காரில் தூக்கிப்போட்டு காருக்கு தீ வைத்து எரித்ததுள்ளார். 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக ரூபின் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தலைமறைவாக உள்ள பிரதாப்பை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Tirupati #Extra Marital Affair #software engineer #Burnt to death in Car #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story