சல்மான் கழுத்துக்கு நெருங்கும் கத்தி.. காரணம் என்ன?.. பாஜக முக்கியப்புள்ளி பகீர் தகவல்.!
சல்மான் கழுத்துக்கு நெருங்கும் கத்தி.. காரணம் என்ன?.. பாஜக முக்கியப்புள்ளி பகீர் தகவல்.!
மராட்டிய மாநிலத்தில் அரசியல் புள்ளி கொலை வழக்கில் தொடர்புடைய லாரன்ஸ் குழுவை சேர்ந்த நபர்களின் எச்சரிக்கையால் சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 1998 ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புர் பகுதியில் Hum Saath Saath Hain என்ற ஹிந்தி திரைப்பட படப்பிடிப்பின்போது, நடிகர் சல்மான் கான் Black Buck எனப்படும் மானை வேட்டையாடி இருந்தார். இந்த விஷயம் தொடர்பான வழக்கில் 2018ல் 5 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அவர் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.
இதனிடையே, நடிகர் சல்மான் கானை கொலை செய்ய பல முயற்சிகள் நடந்தது. இதற்கு காரணமாக பிஷ்ணோய் (Bishnoi) எனப்படும் சமூகம், கருப்பு மானை சல்மான் வேட்டையாடியதால், அவரை கொலை செய்ய முயற்சிக்கிறோம் என தெரிவித்தது. இந்த விசயத்திற்கு பிரபல ரௌடியான லாரன்ஸ் பிஷ்ணோய் குழு தலைமை தாங்குகிறது.
இதையும் படிங்க: பெண்ணின் தலைக்குள் பாய்ந்த தண்ணீர் தொட்டி; ஆப்பிள் சாப்பிட்ட ஆன்டியை அதிரவைத்த சம்பவம்.!
550 ஆண்டுகால பாரம்பரியம்
அதாவது, பிஷ்ணோய் என்ற சமூகம் கடந்த 550 ஆண்டுகளுக்கு முன்பு குரு ஜம்பேஸ்வர் என்பவரால் 29 விதிகளை பின்பற்றும் வகையில் தோற்றுவிக்கப்பட்டது. இவர்கள் இன்று வரை 29 கொள்கையை தலையாக கடமையாக கடைபிடித்து வரும் நிலையில், அவர்களின் புனித தெய்வமாக கருதப்படும் கருப்பு மானை சல்மான் கான் வேட்டையாடியது அவர்களுக்கு ஆத்திரத்தை தந்துள்ளது.
லாரன்ஸ் குழு
இந்த சம்பவத்தின் அழுத்தம் பாரம்பரியமாக பிஷ்ணோய் குடும்ப மரபில் பிறந்தவர்களுக்கு சிறுவயதில் இருந்து கூறி வளர்க்கப்பட்டுள்ளது. இதனால் பிஷ்ணோய் குடும்பத்தில் பிறந்த லாரன்ஸ், தனது பாரம்பரிய தெய்வமான மானை வேட்டையாடிய சல்மான் கானை கொலை செய்ய வேண்டும் என களமிறங்கியுள்ளார். 1998 ல் லாரன்ஸ் 5 வயதுடையவர் ஆவார். இன்று மிகப்பெரிய ரௌடி கும்பலுக்கு தலைவனாக இருக்கிறார்.
என்சிபி புள்ளி கொலை
சமீபத்தில் நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மும்பை பாந்த்ரா கிழக்கு தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், மராட்டிய மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் லாரன்ஸ் குழுவால் கொலை செய்யப்பட்டார். அவருக்கு 30 நாட்களுக்கு முன்பே கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அவரின் பயண விபரங்கள் சேகரிக்கப்பட்டு கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டது. இந்த கொலை திட்டத்திற்கு லாரன்ஸ் குழு மூளையாக இருந்துள்ளது.
பாஜக முன்னாள் எம்.பி அறிவுறுத்தல்
இதனால் நடிகர் சல்மான் கானின் உயிருக்கும் அச்சம் ஏற்படலாம் என பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இத்தனிடையே, மராட்டிய மாநில பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பியுமான ஹர்நாத் சிங் யாதவ், தனது ட்விட்டர் பக்கத்தில் சல்மான் கான் பிஷ்ணோய் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்களின் தெய்வத்தை நீங்கள் வேட்டையாடி சமைத்து சாப்பிட்டதால், அவர்களின் உணவுகள் புண்பட்டுள்ளது. அந்த சமூகம் உங்களின் மீது நீண்ட நாட்களாக கோபத்தில் இருக்கிறது. மனிதர்கள் தவறு செய்பவர்கள் என்னும், நீங்கள் மிகப்பெரிய நடிகர், மக்கள் உங்களை நேசிக்கிறார்கள், பிஷ்ணோய் சமூக உணர்வுக்கு மதிப்பளித்து, மன்னிப்பு கேளுங்கள்" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பரமா.. மரண பீதியை காண்பிச்சிட்டாங்கடா.. சிங்கத்தை கண்டு தலைதெறித்து ஓடிய தம்பதி.!