தமிழக முன்னாள் ஆளுநர், முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி காலமானார்.!
தமிழக முன்னாள் ஆளுநர், முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி காலமானார்.!
தமிழ்நாடு முன்னாள் ஆளுநரான பாத்திமா பீவி முதுமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கேரளாவில் இன்று காலமானார்
கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் 1927 ஆம் ஆண்டு மீரா சாகிப்- கதீஜா பீவி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர் பாத்திமா பீவி. சட்டப்படிப்பில் தங்கப் பதக்கம் வென்ற அவர் 1984ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதியானார். பின்னர் 1989ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் இருந்துள்ளார்.
பாத்திமா பீவி அவர்கள் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பெற்றவர். இவர் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் 1997ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு ஆளுநராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
பாத்திமா பீவி அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொல்லம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் 96 வயது நிறைந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.