பாஜகவின் முக்கிய புள்ளி கொரோனவால் மரணம்.! உச்சகட்ட வேதனையில் பிரதமர் மோடி.!
கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனவை கட
கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது.
ஆனாலும், கொரோனாவால் ஏற்படும் மரணம் நாள்தோறும் நடந்துகொண்டே இருக்கிறது. இந்தநிலையில், கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் காந்தி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவர் திலீப் காந்தி. இவர் பாஜக சார்பில் 1999 ஆம் ஆண்டு அகமத்நகர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2003 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கப்பல்த்துறையில் இவர் மத்திய அமைச்சராக இருந்தார். இதனையடுத்து 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் அதே தொகுதியில் வெற்றிபெற்றார். இதனையடுத்து நடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலிலும் அவர் வெற்றிபெற்றார். ஆனால், அவருக்கு கடந்த 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், முன்னாள் மத்திய மந்திரி திலீப் காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியில் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில், "முன்னாள் எம்.பி.யும் அமைச்சருமான திலீப் காந்தி ஜி மறைந்ததில் வருத்தம். சமுதாய சேவைக்கு அவர் செய்த தீவிர பங்களிப்புகளுக்காகவும், ஏழைகளுக்கு உதவியதற்காகவும் அவர் நினைவுகூரப்படுவார். மகாராஷ்டிராவில் பாஜகவை வலுப்படுத்த அவர் பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி." என பதிவிட்டுள்ளார்.