×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உத்திரபிரதேசத்தில் முன்னாள் எம்பி ஆதிக் அகமது சுட்டுக் கொலை...! அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு..!!

உத்திரபிரதேசத்தில் முன்னாள் எம்பி ஆதிக் அகமது சுட்டுக் கொலை...! அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு..!!

Advertisement

உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லக்னோ, பிரபல ரவுடியும் முன்னால் எம்.பியுமான ஆதிக் அகமதுவும் அவரது சகோதரரும் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டனர். சில மணிநேரங்கள் முன்பு மருத்துவ சிகிச்சைக்காக ஆதிக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் பிரயாக்ராஜ் அழைத்துச் செல்லப்பட்டனர் அப்போது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டு செல்லும் போது யாரோ ஒரு கும்பல் இருவரையும் சுடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மாதம் பிரயாக்ராஜ் நீதிமன்றம், ஆதிக் அகமது உள்ளிட்ட மூன்று பேருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Uttar pradesh #A Famous Rowdy Shot Dead #144 Prohibitory Order
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story