பிணத்துடன் மருத்துவமனை ஊழியர்கள் செய்த காரியம்! வைரலாகும் புகைப்படம்!
Four nurses taken selfie with dead body
மனிதன் கண்டுபிடித்த பல கண்டுபிடிப்புகளில் பல கண்டுபிடிப்புகள் மிகவும் முக்கியமானவை. மிகவும் அத்தியாவசியமானதும் கூட. ஆனால் சில கண்டுபிடிப்புகளை நினைக்கும் போது ஐயோ ஏண்டா மனிதன் இதை கண்டுபிடித்தான் என்று நினைக்க தோன்றுகிறது. அதில் ஒன்றுதான் செல்பி.
செல்பி மோகம் தலைவிரித்து ஆடுகிறது. செல்பியால் பல உயிர்கள் பலியாகின்றன. இந்நிலையில் சமீபத்தில் பிரபல நடிகர் ஹரிகிருஷ்ணா சாலை விபத்து ஒன்றில் அகால மரணம் அடைந்தார் என்பது தெரிந்ததே.
அவருடைய மரணத்திற்கு பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த நான்கு நர்ஸ்கள் ஹரிகிருஷ்னாவின் பிணத்துடன் செல்பி எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படம் வைரலாக பரவியதை அடுத்து பிணத்துடன் செலிபியா என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். விஷயம் அறிந்த ஹரிகிருஷ்ணாவின் குடும்பத்தினர் இந்த செயல் மிகவும் வேதனை அளிப்பதாக வருத்தம் தெரிவித்தனர்.
இதைப்பற்றி தகவல் அறிந்த மருத்துவமனை அந்த நான்கு செவிலியர்களையும் பனி நீங்கம் செய்ததோடு ஹரிகிருஷ்ணாவின் குடும்பத்திடம் மன்னிப்பும் கேட்டுள்ளது.