×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு; முடங்கும் வட மாநிலங்கள்: உஷார் நிலையில் போலீசார்..!

'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு; முடங்கும் வட மாநிலங்கள்: உஷார் நிலையில் போலீசார்..!

Advertisement

ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற உள்ளது.

இந்திய ராணுவ பணிக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் படி 4 ஆண்டுகள்  மட்டும் பணிபுரியும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ், ஆட்கள் சேர்ப்பதற்கான விவரங்களை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பணிபுரிய தகுதி, கல்வித் தகுதி, மருத்துவத் தரநிலைகள், மதிப்பீடு, விடுப்பு, ஊதியம், ஆயுள் காப்பீட்டுத் தொகை போன்றவற்றை விமானப்படை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டக்காரர்களை அமைதிப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. பீகார், உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட 9 மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.

இதனையடுத்து அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தவிர்க்க, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் இன்றும் நாடு முழுவதும் அமைதி வழியில் போராட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று காவல்துறையினரின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைக்க வேண்டும் என அந்தந்த மாநிலங்களில் உள்ள காவல்தூறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Agnipath #Military service #Bharat Bandh #Police Alert
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story