தத்தளிக்கும் தலைநகர்..! அதிகரிக்கும் உயிரிழப்பு.! ஒருவாரம் முழு ஊரடங்கை அறிவித்த முதலமைச்சர்.!
இந்தியாவில் கொரோனா சமீப காலமாக குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துவரும் வது அலையில்
இந்தியாவில் கொரோனா சமீப காலமாக குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துவரும் வது அலையில் கடந்த சில வாரங்களாக புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக இந்தியா விளங்குகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ள பகுதிகளில் டெல்லியும் ஒன்று. டெல்லியில் நேற்று ஒரே நாளில் 25,462 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மட்டும் டெல்லியில், 161 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி உள்ளது. மேலும், புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இந்த சூழலில் புதிய கட்டுப்பாடுகளை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று அறிவித்தார். அதில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்று இரவு 10 மணி முதல் வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 26) காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
அத்தியாவசிய சேவைகள், உணவு சேவைகள், மருத்துவ சேவைகள் தொடர்ந்து நடைபெறும். திருமண நிகழ்ச்சியில் 50 பேர் வரை மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படும். இதற்காக தனித்தனியாக அனுமதி அட்டைகள் வழங்கப்படும். வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.