உச்சகட்டத்தில் கொரோனா.! மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த போபால் அதிரடி முடிவு!
full lockdown in bhopal
உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா தொற்று பரவுவதைக் கருத்தில் கொண்டு, மாநிலங்களில் வெவ்வேறு ஊரடங்குகள் முடிவு செய்யப்படுகின்றன.
தமிழகத்திலும் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. அதேபோல் கர்நாடகா, கேரளா மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் உச்சத்தை எட்டியுள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால், கேரளாவில் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தற்போது மத்திய பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், தலைநகர் போபாலில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ஜூலை 24 இரவு 8 மணி முதல் போபாலில் 10 நாட்களுக்கு ஊரடங்கு தொடங்கும் என்று உத்தரபிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார்.