ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்க நீதிமன்றத்திற்கு சென்ற கேரள ஜோடி!
Gay couple in high court
கேரளாவைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கை தம்பதியினர் தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமானதாக பதிவு செய்யக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த நிகேஷ் மற்றும் சோனு என்ற ஓரினச்சேர்க்கை தம்பதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால், சிறப்பு திருமணச் சட்டத்தின் விதிகளின் படி இவர்களது திருமணத்தை அங்கீகரிக்க, கோவில் நிர்வாகங்கள் மறுத்துவிட்டதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும், திருமணம் செய்ய விரும்பும் ஒரே பாலின தம்பதிகளின் அடிப்படை உரிமைகளை இந்த விதிமுறைகள் மீறுகிறது. எனவே, ஓரினச்சேர்க்கை குற்றமில்லை என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பை முன்மாதிரியாக கொண்டு, தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த வழக்கினை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ஓரினச்சேர்க்கை தம்பதியினரின் மனு குறித்து பதிலளிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.