தொடர்ந்து காதலிக்க வற்புறுத்திய இளைஞரை வித்தியாசமான முறையில் தண்டித்த இளம்பெண்! மருத்துவமனையில் இளைஞர் சேர்ப்பு
Girl attacked boy with acid
உத்திர பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் தன்னை காதலிக்க வற்புறுத்திய 24 வயது இளைஞரின் மீது 20 வயது இளம்பெண் ஆசிட்டை வீசியுள்ளார்.
பொதுவாக இதுவரை ஆண்கள் தான் பெண்கள் மீது ஆசிட் வீசுவதை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நேற்று ஒரு அதே விஷயத்தை ஒரு ஆணுக்கு எதிராக செய்துள்ளார்.
ரோகித் யாதவ் என்ற அந்த இளைஞர் பவானிகஞ்ச் என்ற கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் வேலைப் பார்த்து வருககிறார். திடீரென நேற்று ரோகித் பண்ணையில் ஒரு மறைவான இடத்தில் பதுங்கிகொண்டு வெளியில் வரவில்லை.
உடன் பணிபுரிபவர்கள் தேடி கண்டடுபிடித்தனர். அப்போது தான் அவரது உடம்பில் பின்பறம், தோள்பட்டை, மார்பு ஆகிய இடங்களில் ஆசிட் பட்டு காயமாக இருந்ததை அவர்கள் கண்டனர்.
உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து ரோகித்தை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில் இளம்பெண் ஒருவர் தான் இவர் மீது ஆசிட்டை வீசியுள்ளார் என தெரியவந்தது.
இதற்கான காரணத்தை விசாரிக்கையில் ரோகித் நீண்ட நாட்களாக அந்த பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் மிகவும் எரிச்சலடைந்த அந்த பெண் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.