×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலனுடன் ஓட்டம் பிடித்த சிறுமி! பஞ்சாயத்தில் வைத்து இப்படியா அடித்து உதைப்பது??

Girl Beaten by old man in panjayath

Advertisement


ஆந்திராவின் அனந்த்பூர் மாவட்டத்தில் கே.பி.தொடி கிராமத்தில் சிறுமி ஒருவர்  20 வயது வாலிபர் மீது காதல் கொண்டு அவருடன்  ஓடிப்போனதாக  கூறப்படுகிறது. இந்த ஜோடியை மீண்டும் அழைத்து வந்த கிராமத்தினர் ஊர் பஞ்சாயத்தில் ஆஜர்படுத்தி கடுமையாக எச்சரித்தனர்.

அந்த பஞ்சாயத்தில் முதியவர் ஒருவர் சரமாரியக முதியவர் ஒருவர் தாக்கும வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் முதலில் வெறும் கைகளாலும், பின்னர் ஒரு குச்சியாலும் சரம்வாரியாக அடித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், அந்த கிராம மக்களும், அந்த சிறுமியின் பெற்றோரும் சிறுமியை அடித்த முதியவர் மீது புகார் கொடுக்க முன்வரவில்லை என்றும், முதியவரால் தாக்கப்பட்ட சிறுமி புகார் அளிக்க முன்வருகிறாரா என்பது குறித்து விசாரணை செய்ய பெண் காவலரை அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.

மேலும், வாலிபர் அந்த சிறுமியுடன் உடல் ரீதியான உறவைக் கொண்டிருப்பதாக தெரியவந்தால் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#young girl #beaten
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story