பெண்ணிடம் அத்துமீறி, புகாரளித்ததும் கொலை முயற்சி.. குடியிருப்பு பகுதியில் கயவனின் துணிச்சலான செயல்.!
பெண்ணிடம் அத்துமீறி, புகாரளித்ததும் கொலை முயற்சி.. குடியிருப்பு பகுதியில் கயவனின் துணிச்சலான செயல்.!
பெண்ணை காதலித்து ஏமாற்றி பலாத்காரம் செய்து விட்டு, அவரை ஒருவர் கொலை செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, சுப்பிரமணியபுரம் பகுதியில் 41 வயதான ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஐடி ஆலோசகராக பணியாற்றும்போது, மது என்ற ஒரு நபரை காதலித்துள்ளார். இந்த நிலையில், மது அந்த பெண்ணிடம் திருமணம் செய்வதாக உறுதியளித்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின் அவரை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்த நிலையில், இது அந்தப் பெண்ணுக்கு தெரியவர அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனால் கடந்த ஆண்டு மது மீது பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி உள்ளிட்ட வழக்குகளில் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.
இதன் காரணமாக கோபமடைந்த மது கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தனது இரண்டு நண்பர்களை அழைத்துக்கொண்டு உத்திரஹல்லி, பாலாஜி லேஅவுட் அருகாமையில் பெண்ணை சந்தித்து 'நீ இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும்' என மிரட்டியுள்ளார். அவர்களின் மிரட்டலை கண்டுக்காத பெண் சென்று கொண்டிருந்ததால், ஆவேசத்தில் மது ஒரு கயிறை வைத்து பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொல்ல முயற்சித்துள்ளார்.
அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்து சண்டை போட்ட நிலையில், மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பின் இது குறித்து அந்த பெண் காவல்துறையினரிடம் புகாரளிக்க, அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.