×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொழிலதிபரின் வீட்டிற்குள் நுழைந்து பெண் செய்த மோசமான காரியம்! அடுத்த சில நாட்களிலேயே அவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

Girl cheating business man in kerala

Advertisement

கேரளா அடிமலி நகரில் வசித்து வருபவர் விஜயன். தொழிலதிபரான இவரது வீட்டிற்கு கடந்த ஜனவரி மாதம் இறுதியில் லதாதேவி என்ற பெண் வந்துள்ளார். அவர் விஜயனிடம், அவரது உறவினரின் நிலத்தை வாங்குவது குறித்து அருகில் அமர்ந்து பேசியுள்ளார்.  அப்பொழுது இருவரும் ஒன்றாக இருப்பது போல விஜயனுக்கே தெரியாமல் அந்த பெண் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் சைஜன் என்ற நபர் விஜயனுக்கு போன் செய்து, தான் ஒரு ஓய்வுபெற்ற காவல் அதிகாரி எனவும், நீங்கள் லதாதேவியுடன் தவறாக நடந்து கொண்டதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது  நான் கேட்கும் பணத்தை  கொடுக்கவில்லை என்றால் துஷ்பிரயோக வழக்குபதிவு செய்து உங்களை கைது செய்ய வைப்பேன் எனவும் கூறி மிரட்டியுள்ளார்.

அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த  விஜயன் பென்னி என்ற வழக்கறிஞர் மூலம் ரூபாய் 70,000 பணத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் தொடர்ந்து மிரட்டி ரூ.1.37 லட்சத்தை அந்த கும்பல் வாங்கியுள்ளது. பின்னர் சமீபத்தில் அதையே கூறி ரூ.7 லட்சத்திற்கான காசோலையிலும் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

இதனைப் பொறுத்துகொள்ள முடியாத விஜயன் சமீபத்தில் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து வழக்குபதிவு செய்த போலீசார்கள் எந்த தவறும் செய்யாத விஜயனை மிரட்டி பணம்பறித்த லதாதேவி, சைஜன், பென்னி  மற்றும் ஷமீர் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்த ஏமாற்று கும்பல் இதனை போன்று பலரையும் மிரட்டி பணம் பறித்ததாக கூறியுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Business man #cheating #money
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story