தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எரிந்த நிலையில் சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம்.! அடுத்தடுத்து வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!!

எரிந்த நிலையில் சூட்கேஸில் கிடந்த பெண்ணின் சடலம்.! அடுத்தடுத்து வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!!

Girl killed and dumbed in and by lover Advertisement

டெல்லி காஜிபூரில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பாதி எரிந்த நிலையில் சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள்  சூட்கேஸை கைப்பற்றி சோதனை செய்த நிலையில் உள்ளே எரிந்த நிலையில் பெண் ஒருவரது உடல் இருந்துள்ளது.

தொடர்ந்து போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சூட்கேஸ் கிடந்த பகுதியின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது ஹூண்டாய் வெர்னா கார்  ஒன்று சந்தேகப்படும் வகையில் அப்பகுதியில் சென்றுள்ளது. அதனை தொடர்ந்து காருக்கு சொந்தக்காரரான அமித் திவாரியிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

Love

அமித் திவாரியும், அவரது உறவுக்கார பெண்ணாகிய 22 வயது நிறைந்த ஷில்பாவும் ஒரு ஆண்டுக்கு மேலாகக் காதலித்து வந்துள்ளனர். மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இந்நிலையில் ஷில்பா, அமித் திவாரியிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள கேட்டு வற்புறுத்தியுள்ளார். அதில் ஆத்திரமடைந்த அமித் திவாரி  குடிபோதையில் ஷில்பாவிடம் தகறாரில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க: 15 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த 13 வயது சிறுமி; மகிழ்ச்சியாக இருப்பதாக மீசையை முறுக்கி வீடியோ ரிலீஸ்.!

மேலும் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். மேலும் அவரது உடலை சூட்கேசில் வைத்து தனது டாக்சி டிரைவர் நண்பரின் உதவியுடன் அதனை காரில் கொண்டு சென்று காஞ்சிபுரம் அருகே வைத்து தீ வைத்துள்ளனர் என தெரிய வந்தது. தொடர்ந்து அமித் திவாரி, டாக்ஸி டிரைவர் இருவரும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: ஆன்லைன் காதல்.. நேரில் வந்த காதலி.. நிகழ்ந்த சம்பவத்தில்.. இறந்த காதலன்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Love #Murder #arrest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story