தனது காதலுக்கு எதிரியான குடும்பத்தார்கள்.! பழிவாங்குவதற்காக 18 வயது சிறுமி செய்த வெறித்தனமான காரியத்தை பார்த்தீர்களா!!
girl try to murder family members for love
உத்திரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் வசித்துவந்த 18 வயதுடைய சிறுமி, அரவிந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து கடுமையாக கண்டித்துள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாத சிறுமி தொடர்ந்து அந்த வாலிபருடன் பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் குடும்பத்தார்கள் அந்த வாலிபர் மீது போலீசில் புகார் அளித்தநிலையில் அவர்கள் அந்த இளைஞனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்தநிலையில் வாலிபர் சிறுமியின் வீட்டுக்கு சென்று கோபத்துடன் எச்சரிகைவிடுத்துள்ளார். அதன் பின்னரும் சிறுமி பெற்றோர் பேச்சிற்கு மதிப்பு கொடுக்காமல் தொடர்ந்து அரவிந்துடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் தங்களது காதலுக்கு பெற்றோர்கள் தொடர்ந்து இடையூறு கொடுத்து வந்தநிலையில் சிறுமி அவர்களை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து அவர் வீட்டில் உள்ள அனைவருக்கும் சமைத்து, சாப்பாட்டில் விஷத்தை கலந்து வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த சாப்பாட்டை சாப்பிட்ட சிறுமியின் தாய், 2 சகோதரிகள், 2 சகோதரர்கள், அண்ணி, அண்ணன் மகன் என 7 பேரும் மயங்கி விழுந்து, உயிருக்கு போராடியுள்ளார். அப்பொழுது அதனை கண்ட பக்கத்துவீட்டுக்காரர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து இதுகுறித்து போலிசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சாப்பாட்டில் விஷம் வைத்து கொலைமுயற்சி செய்த சிறுமி மற்றும் அவரது காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.