×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2030-க்குள் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,00,000/-: காரணம் என்ன?.. விபரம் உள்ளே.!

2030-க்குள் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,00,000/-: காரணம் என்ன?.. விபரம் உள்ளே.!

Advertisement

தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 

"தங்கம் விலை கடந்த 2013 ல் கிராம் ரூ.1500 இருந்தது, சவரன் ரூ.12000 என இருந்தது. 2024 இன்றில் தங்கத்தின் விலை 10 மடங்கு உயர்ந்து சவரனுக்கு ரூ.52 ஆயிரம் என விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1 இலட்சம் அளவில் சென்றுவிடும். 

5 ஆண்டுகளில் இரட்டிப்பு விலை உயர்வு

2030 க்கும் முன்பும் தங்கத்தின் விலை ரூ.1 இலட்சத்தை கடந்து செல்லலாம். உலக போர்கள் பொருளாதாரத்தை பாதிக்கிறது என்பதால், தங்கத்தின் விலை உயரும். கோவிட் போன்ற பெருந்தொற்று ஏற்பட்டாலும் அதே நிலை தான். அட்சய திருதியை காலகட்டத்தில், கடந்த ஆண்டை விட 30% தங்கம் விற்பனை ஆகியுள்ளது. 

இதையும் படிங்க: பிளவுபடுகிறது அதிமுக? பாஜகவின் மாஸ்டர் பிளான் என்ன? - சட்டத்துறை அமைச்சரின் பகீர் தகவல்.!

குறைய வாய்ப்பே இல்லை

நுகர்வோரின் அளவு தொடர்ந்து கூடிக்கொண்டே இருப்பதால், தங்கத்தின் விலை கணிசமாக உயருகிறது. அவர்களுக்கு தங்கத்தின் மீதான முதலீடு, நீண்ட கால முதலீட்டுக்கு உகந்தது என்று கருதுவதால் நகையின் விலை உயருகிறது. பொருளாதார வீழ்ச்சி இருக்கும்போது கட்டாயம் தங்கத்தின் விலையை உயர்த்திக்கொண்டு செல்லும். அதன் விலை குறைவதற்கு வாய்ப்புகளே இல்லை" என கூறினார்.

குண்டுமணி தங்கமாவது வாங்கி திருமணத்தை நடத்திவிட வேண்டும் என எண்ணிப்பார்க்கும் நடுத்தர வர்க்கத்துக்கு இந்த செய்தி பேரதிர்ச்சியை மட்டுமே வழங்கும் வகையில் அமைந்துள்ளது தங்கத்தின் மீதான நுகர்வை உறுதி செய்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #tamilnadu #Gold Silver Price
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story