குட் நியூஸ்... ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு... புதிய தேதியை வெளியிட்ட யூஐடிஏஐ.!
குட் நியூஸ்... ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு... புதிய தேதியை வெளியிட்ட யூஐடிஏஐ.!
அதார் அட்டை ஒவ்வொரு இந்தியனின் தனித்துவமான அடையாள அட்டையாகும். இது இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆதார் அடையாள அட்டையை பத்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இந்த ஆதார் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் புதுப்பிப்பதற்கு 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால் ஜூன்14ஆம் தேதிக்குள் புதுப்பித்தால் ஒவ்வொரு குடிமகனும் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது . தற்போது அதார் அட்டையை இலவசமாக புதுப்பித்துக் கொள்வதற்கான காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.