×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாதுகாப்பு இல்லை...! பலகோடி பேர் பயன்படுத்தும் Google Pay செயலிக்கு ரிசர்வ் வங்கி தடையா.? உண்மை என்ன..?

Google pay banned news update

Advertisement

இந்தியாவில் பலகோடி பேர் பயன்படுத்திவரும் Google Pay செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதாக செய்தி பரவிவரும் நிலையில் அதன் உண்மை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

UPI மூலம் பணம் அனுப்பும் வசதி அறிமுகமானத்தில் இருந்து Google Pay, Phone pe, PayTM போன்ற பல செயலிகள் மூலம் மக்கள் மற்றவர்களுக்கு பணம் அனுப்பி வருகின்றனர். எங்கள் செயலி மூலம் பணம் அனுப்பினால் scratch கார்ட் தருகிறோம், கேஷ் பேக் தருகிறோம் என, அனைத்து செயலிகளும் மக்களை தங்கள் வசம் கவர்ந்துவிட்டது.

இதில் மிகவும் முக்கியாக செயலியாக கருதப்படுவது, கூகிள் நிறுவனத்தின் Google Pay செயலி. இந்தியாவில் பலகோடி பேர் இந்த  செயலியை பயன்படுத்திவரும் நிலையில், Google Pay செயலி, மத்திய அரசின் வணிக சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படவில்லை என்றும், ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவில்லை என்றும், இந்த செயலி மூலம் பணப்பரிமாற்றம் செய்வோரின் வங்கிக் கணக்குகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கூகுள் பே, எந்தப் பணப்பரிமாற்ற அமைப்பையும் அதனுள் கொண்டிருக்கவில்லை என்றும், இது மூன்றாம் தர பணப்பரிமாற்ற செயலியே என்பதால்  அதற்கு அனுமதி பெற தேவையில்லை என்றும் கூகுள் பே நிறுவனம் சார்பாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் Google Pay செயலிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்தி போலி என்றும், மற்ற செயலிகள் போல் இதுவும் பாதுகாப்பான செயலிதான் எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#google pay
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story