கவுதம் கம்பீரை காணவில்லை! டெல்லியில் பரபரப்பு!
gowtham kampir missed poster
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீரை காணவில்லை என டெல்லியில், சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் காற்று மாசு பிரச்னை அதிகமாக நிலவி வருகிறது. தீபாவளி பண்டிகையின்போது ஹரியான விவசாயிகள் ஏற்படுத்திய புகையினால் இந்த சூழல் நிலவி வருவதாக குற்றசாட்டு எழுந்தது.
இந்நிலையில், காற்று மாசு குறித்து விவாதிக்க நாடாளுமன்ற கமிட்டியின் கூட்டம் கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு 29நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்ப விடுக்கப்பட்டது. ஆனால். அதில் வெறும் 4நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். டெல்லி மாசு குறித்து கெஜ்ரிவால் அரசை கடுமையாக விமர்சனம் செய்த எம்பி கவுதம் கம்பீரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்தநிலையில் கவுதம் கம்பீரை காணவில்லை என டெல்லியில், சுவரொட்டி ஒட்டியுள்ளனர். டெல்லியில் காற்றுமாசு குறித்து நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கவுதம் கம்பீர் பங்கேற்கவில்லை என அந்த சுவரொட்டியில் கூறியுள்ளனர். பா.ஜ.க. எம்.பி.யை காணவில்லை என தலைநகர் டெல்லியில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ள சம்பவம், நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.