×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: புத்தாண்டு கொண்டாட்டம் எதிரொலி: G-Pay, Phone Pay செயலிகள் முடங்கியது.. பயனர்கள் அவதி..!

#Breaking: புத்தாண்டு கொண்டாட்டம் எதிரொலி: G-Pay, Phone Pay செயலிகள் முடங்கியது.. பயனர்கள் அவதி..!

Advertisement

இந்தியாவில் புத்தாண்டு பண்டிகையானது இன்னும் சில மணி நேரங்களில் மக்களால் சிறப்பிக்கப்பட உள்ள நிலையில், தற்போது பலரும் பொது இடங்களில் குவிந்து தங்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து வருகின்றனர். 

இவர்கள் ஜிபே, போன்_பே போன்ற செயலிகளை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி பணம் பரிமாற்றம் செய்து வருகின்றனர். 

இவை அவ்வப்போது அதிக பயனர்கள் உபயோகத்தின் காரணமாக முடங்குவதும் இயல்பானது. இன்று விடுமுறையைத் தொடர்ந்து பலரும் GPay, Phone Pay செயலிகளை அதிகளவு உபயோகம் செய்த காரணத்தால், அவை திடீரென முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த அரைமணி நேரத்திற்கும் மேலாக அதன் பயனர்கள் தங்களது கணக்குகளை உபயோகம் செய்ய இயலாமல் தவித்த நிலையில், இது தொடர்பாக சமூக வலைதளங்களில் தகவல் தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #new year #2023 #Phonepe #Gpay #இந்தியா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story