கற்பனையை மிஞ்சும் கோஇன்ஸிடன்ஸ்.. தம்பதியை சேர்த்துவைத்த நெகிழ்ச்சி.!
கற்பனையை மிஞ்சும் கோஇன்ஸிடன்ஸ்.. தம்பதியை சேர்த்துவைத்த நெகிழ்ச்சி.!
பூவுலகத்தில் பல தற்செயல்கள் நாம் எதிர்பாராத நேரத்தில் நமது வாழ்க்கையில் நடக்கும். அது திரைப்படங்களில் மட்டும் காணும் வகையில் இருந்தாலும், சில நேரங்களில் அவை அப்படியே யாரேனும் ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும். அவ்வாறான தற்செயலுக்கு ஒரு சிறந்த உதாரணமாக Quora பதிவில் தம்பதி ஒருவர் பதிவிட்டவை வைரலாகி வருகின்றன.
அந்த பதிவில், "நானும் எனது மனைவி சுருசி சின்ஹாவும் ஒரே பிறந்தநாள், ஒரே பிறந்த வருடம் கொண்டவர்கள். இருவருக்கும் பிறந்த நேரம் 3 நொடிகள் மட்டுமே மாறுபாடானது.
மனைவி லக்னோவில் பிறந்து கான்பூரில் பயின்றவர். நான் கான்பூரில் பிறந்தது லக்னோவில் படித்தேன். ஒரே கல்லூரி, ஒரே பாடம், ஒரே வகுப்பறை. 3 பெஞ்சுகள் மட்டுமே எங்களுக்குள் இடைவெளி இருந்தது.
எங்கள் இருவருக்கும் அது நினைவுகளில் இல்லை. முகநூலில் தான் இறுதியாக நாங்கள் சந்தித்தோம். எங்கள் இருவருக்கும் ஒரேயொரு பரஸ்பர நண்பர்கள். எனக்கு பள்ளி நண்பராக இருந்தவர், மனைவிக்கு கல்லூரி நண்பர்.
அவளின் பள்ளிப்பருவ தோழி, எனக்கு கல்லூரியில் தோழி. எனது பள்ளி தோழி, அவளின் கல்லூரி தோழி. இருவரின் இனிஷியல் எஸ் தான். இருவரும் மென்பொறியாளர், ஒரே நிறுவனத்தில் ஒரே பிராஜெக்டில் பணியாற்றுகிறோம்.
எங்களது அப்பாக்கள் இருவரும் வங்கி பணியாளர்கள், அம்மக்கள் இல்லத்தரசிகள். எனது தலைமுறையில் நான் குடும்பத்தில் மூத்தவன், அவளும் அவர்களின் குடும்பத்தில் மூத்தவள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.