புல்டோசரில் ஜாலியாக நடந்த திருமண ஊர்வலம்.! டிரைவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.! நடந்தது என்ன??
புல்டோசரில் ஜாலியாக நடந்த திருமண ஊர்வலம்.! டிரைவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.! நடந்தது என்ன??
மத்தியப் பிரதேசம், பெதுல் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், மணமகன் புல்டோசரில் அமர்ந்து ஊர்வலமாக வந்த வீடியோ வைரலாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம், பெதுல் மாவட்டத்தை சேர்ந்த அங்குஷ் என்பவருக்கும், சுவாதி மால்வியா என்பவருக்கும் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் நடந்துள்ளது. சிவில் இன்ஜினியரான அங்குஷ்
டாடா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவர் திருமண ஊர்வலத்தின் போது குதிரை, வண்டி, பைக், கார் ஆகியவை வேண்டாம் என மறுப்பு தெரிவித்து, வித்தியாசமாக புல்டோசரில் ஊர்வலம் செல்ல ஆசைப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர்களிடம் கூறிய நிலையில், அவர்களும் அதற்கான ஏற்பாடுகளை செய்து புல்டோசரில் அலங்காரம் செய்யப்பட்டு மணமகன் புல்டோசரில் திருமண ஊர்வலம் வந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வந்தது.
இந்த நிலையில், புல்டோசரை மாப்பிள்ளை ஊர்வலத்துக்கு பயன்படுத்தியதற்காக அதன் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது புல்டோசர் வணிக பயன்பாட்டுக்கான இயந்திரம். அதனை திருமண ஊர்வலம் போன்றவற்றிற்கு பயன்படுத்தியது மோட்டார் வாகன விதிகளை மீறல் என புல்டோசர் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.