சாப்பிட்டு மொய் வைக்க போன பஸ் கண்டக்டர்.. கல்யாண பெண்ணுக்கு தாலி கட்டிய சம்பவம்.. செம ட்விஸ்ட்..
திருமண மண்டபத்தில் இருந்து மாப்பிளை ஓடிபோனநிலையில் மணப்பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
திருமண மண்டபத்தில் இருந்து மாப்பிளை ஓடிபோனநிலையில் மணப்பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் பைதி பைந்தூர்நாலா கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். சிருங்கேரியைச் சேர்ந்தவர் சிந்து. இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவதாக இரண்டு வீட்டாரும் பேசி முடிவு செய்திருந்தநிலையில் திருமண நாளும் வந்தது.
நேற்று முன்தினம் இரவு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து அனைவரும் கிளம்பிவிட்டநிலையில் மாப்பிளை தனது அறைக்கு ஓய்வு எடுக்க செல்வதாக கூறி சென்றுவிட்டார். இந்நிலையில் கல்யாண மாப்பிளையை பார்ப்பதற்காக இளம் பெண் ஒருவர் மண்டபத்திற்கு வந்துள்ளார்.
அந்த பெண் கல்யாண மாப்பிள்ளையின் முன்னாள் காதலி ஆவர். தன்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை நீ எப்படி திருமணம் செய்துகொள்ளலாம் எனவும், தன்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் நாளை காலை மண்டபத்துக்கு வந்து அனைவர் முன்னிலையிலும் உண்மையைக் கூறி திருமணத்தை நிறுத்திவிடுவேன் எனவும் அந்த பெண் மிரட்டியுள்ளார்.
இதனால் வேறு வழி தெரியாமல் அந்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த நவீன், அன்று இரவே திருமண மண்டபத்தில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளார். மாப்பிளை மண்டபத்தில் இருந்து ஓடிப்போனது தெரியாமல் அவரது உறவினர்கள் மறுநாள் காலை திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு மாப்பிளைக்கா காத்திருந்த நிலையில்தான் மாப்பிளை ஓடிப்போன விஷயம் தெரியவந்துள்ளது.
இதனால் இரண்டு வீட்டாரும் என்ன செய்வது என தெரியாமல் குழம்பி நிற்க, மறுபுறம் மணமகள் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் மணிமேடையில் பரிதாபமாக இருந்துள்ளார். ஒருகட்டத்தில் திருமணத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து அனைவரும் சென்றுவிடலாம் என முடிவு செய்தநிலையில், மணப்பெண்ணை தான் திருமணம் செய்துகொள்வதாக சிருங்கேரி தாலுகா நந்திக் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு என்பவர் முன்வந்துள்ளார்.
இதனை அடுத்து சிந்துவுக்கும், சந்த்ருவுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்திற்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்தியதோடு திடீர் மாப்பிளை சந்த்ருவின் செயலையும் பாராட்டினார். மாப்பிள்ளையான சந்துரு, சிக்கமகளூருவில் அரசு பேருந்து நடத்துநராக வேலை பார்த்து வருகிறார்.
சினிமாவில் வருவதுபோல் நடந்த இந்த திருமணம் அந்த பகுதி முழுவதும் பரவலாக பேசப்பட்டு தற்போது வைரலாகிவருகிறது.