திருமண வரவேற்பு விழாவில் மணமகள் செய்த காரியம்! கன்னத்தில் பளார் விட்ட மணமகன்! பின் நடந்த நெத்தியடி சம்பவம்!!
வரவேற்பு விழாவில் மணமகள் செய்த காரியம்! கன்னத்தில் பளார் விட்ட மணமகன்! பின் நடந்த நெத்தியடி சம்பவம்!!
தற்காலத்தில் திருமணம் என்றாலே ஆட்டம், பாட்டத்திற்கு பஞ்சமில்லாமல் கோலாகலமாக திருவிழாக்களை போல நடைபெற்று வருகிறது. அவ்வாறு பண்ருட்டியிலும் திருமணம் ஒன்று மிகவும் விமரிசையாக நடைபெற்றுள்ளது. அதாவது பண்ருட்டியில் சொந்தமாக தொழில் செய்து வருபவர் ஒருவரது மகளுக்கும், காட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வியாழன்று திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதற்கு முன்பு புதன்கிழமை இரவு திருமண வரவேற்பு விழா நடைபெற்றுள்ளது. அப்பொழுது மணமகள் தனது தோழிகள் மற்றும் உறவினர்களுடன் நடனமாடியபடியே மண்டபத்திற்குள் வருகை தந்துள்ளார். அதனைக் கண்டு ஆத்திரமடைந்த மணமகன் மணமகளின் கன்னத்தில் பளாரென அறைந்துள்ளார். இதனால் ஆவேசமான மணமகளும் திரும்பி அறைந்துள்ளார். இந்த நிலையில் அங்கு பெரும் வாக்குவாதம் வெடித்துள்ளது.
இதனை கண்டுக்கொண்டிருந்த மணமகளின் தந்தை, திருமணத்திற்கு முன்பே இப்படி செய்கிறாயே, திருமணமானால் என்னவெல்லாம் செய்வாய் என உடனடியாக உறவினர்களுடன் பேசி திருமணத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் மறுநாள் குறித்த நேரத்தில் தனது நெருங்கிய உறவுக்காரரது மகனுடன் தன் மகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.