×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன் மாப்பிளை செய்த அதிர்ச்சி காரியம்! ஒரு பகீர் சம்பவம்.

Groom suicide before 4 hours of marriage

Advertisement

ஐதராபாத் மலக்பேட் என்னும் பகுதியை சேர்ந்தவர் 24 வயதான சாப்ட்வேர் என்ஜினியர் சந்தீப். பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துவந்த சந்தீப்பிற்கு அவரது உறவுக்கார பெண் ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்துள்னனர். நிச்சயிக்கப்பட்டபடி திருமண நாளும் வந்தது.

காலை 11 மணிக்கு திருமணம் என்ற நிலையில் இரவு தனது நண்பர்களுடன் ஜாலியாக பேசிவிட்டு மணமகன் அறைக்கு சென்றுள்ளார் சந்தீப். காலை நீண்ட நேரமாகியும் சந்தீப் எழுந்திரிக்கவில்லை. தாலிகட்டும் நேரமும் நெருங்கியது. உறவினர்கள் சந்தீப்பின் அறைக்கதவை தட்டியும் எந்த பதிலும், சத்தமும் இல்லை.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கு மாட்டி சந்தீப் இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியான உறவினர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், சந்தீப்பின் தற்கொலை குறித்து போலீசார் விசாரித்ததில், சந்தீப்பின் தாய் ஏற்கனவே இறந்துவிட்டார், தந்தை பிசினஸ்மேன். இதனால் சந்தீப் அவரது தாத்தாவிடமே வளர்ந்துள்ளார். தாத்தா மீது அதிக பாசமாக இருந்த நிலையில் சமீபத்தில் அவரும் இறந்துள்ளார்.

இதனால் சோகத்தில் இருந்த சந்தீப் தாத்தா இறந்த சோகம் தாங்காமல் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்ததோடு மேலும் இதுகுறித்து விசாரணை செய்துவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suicide #Groom suicide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story