டெபாசிட் ஆன ரூ.11 ஆயிரம் கோடியை 2 மணிநேரத்தில் எடுத்துக்கொண்ட வங்கி ; இன்ப அதிர்ச்சியில் பொங்கி ஆடிப்போன வாடிக்கையாளர்.!
டெபாசிட் ஆன ரூ.11 ஆயிரம் கோடியை 2 மணிநேரத்தில் எடுத்துக்கொண்ட வங்கி ; இன்ப அதிர்ச்சியில் பொங்கி ஆடிப்போன வாடிக்கையாளர்.!
தவறுதலாக ரூ.11 ஆயிரம் கோடி வங்கியின் வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் வங்கி நிர்வாகத்தால் அவை எடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் வசித்து வருபவர் ரமேஷ் சாகர். இவர் கடந்த 6 ஆண்டுகளாக ஸ்டாக் மார்க்கெட் முதலீடு செய்து வந்துள்ளார். கடந்த ஆண்டில் கோடக் டிமேட் அக்கவுண்ட் திறந்துள்ளார். கடந்த ஜூலையில் இவரின் வங்கிக்கணக்கில் ரூ.11 ஆயிரம் கோடி பணம் போடப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
அவர் முதலீடு செய்தது 2 கோடியாக இருக்கும் நிலையில், ரூ.11 கோடி எப்படி வந்திருக்கும் என ஆச்சரியத்தில் இருந்துள்ளார். அந்த பணம் அடுத்த 2 மணிநேரத்திற்குள் வங்கியால் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால் அவர் ஆச்சரியத்தில் இருந்து அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
பின்னர், சிறிது நேரத்தில் டெக்னீகள் பிரச்சனை காரணமாக பணம் தவறுதலாக உங்களுக்கு வந்துவிட்டது என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைப்போல ரமேஷின் வங்கிக்கணக்கு மட்டுமல்லாது பலரின் வங்கிக்கணக்குக்கும் கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளம் மூலமாக வெளிஉலகிற்கு தெரியவந்துள்ளது.