மச்சா 160 ல போடா.. நொடியில் பறிபோன 2 உயிர்.. லைவ் வீடியோவில் அதிர்ச்சி காட்சிகள்.!
மச்சா 160 ல போடா.. நொடியில் பறிபோன 2 உயிர்.. லைவ் வீடியோவில் அதிர்ச்சி காட்சிகள்.!
ரீல்ஸ் மோகம் இன்னும் எத்தனை உயிர்களை காவுவாங்கப்போறது என்பது தெரியாமல், பிள்ளைகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் பெற்றோருக்கு ரீல்ஸ் மோகத்தால் நடக்கும் ஒவ்வொரு விபத்தும் எச்சரிக்கை பாடம் என்பது குறிப்பிடத்தக்கது.
காரில் தொடங்கிய பயணம்
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பகுதியை சேர்ந்த 22 வயது முதல் 27 வயதுடைய, 5 பேர்கொண்ட இளைஞர்கள் குழு சம்பவத்தன்று அகமதாபாத் நகரில் இருந்து மும்பைக்கு தங்களின் மாருதி சுசுகி காரில் பயணம் செய்துள்ளது. இவர்கள் அகமதாபாத் - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் தங்களின் பயணத்தை தொடங்கி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: #Breaking: பிரம்மாண்டமான விளம்பர பேனர் சரிந்து பயங்கரம்; 35 பேரின் நிலை என்ன?.. சூறாவளி காற்றால் பகீர்.!
140 கிமீ வேகத்தில் அசுர பயணம்
இந்நிலையில், இவர்கள் தங்களின் பயணத்தின்போது 140 - 160 கிமீ வேகத்தில் பயணித்த நிலையில், இவர்களின் வாகனம் அகமதாபாத் நகரில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள கட்ச் பகுதியில் விபத்தில் சிக்கியது. முன்னாள் சென்று கொண்டு இருந்த வாகனங்களை, அதிவேகத்திலேயே முந்திச்செல்ல முற்பட்டபோது விபத்து நடந்தது. கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதி நொறுங்கிப்போனது.
நொடியில் நடந்து முடிந்த விபத்து
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், வாகனத்தில் பயணம் செய்த அமன் மெஹபூபாய் ஷேக் மற்றும் சிரக்குமார் கே படேல் ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் பயணித்தபோது காரில் பாடலை ஒலிக்கவிட்டு, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வீடியோ பதிவிட்டவாறு பயணம் செய்துள்ளனர். இவர்களின் கார் விபத்திற்குள்ளானபோது லைவ் வீடியோவில் கார் விபத்திற்குள்ளான சப்தம் மட்டும் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: திடீர் காற்றில் சீட்டுக்கட்டுபோல நொறுங்கி விழுந்த மல்டிலெவல் கார் பார்க்கிங்; 7 பேர் படுகாயம், 50 கார்கள் சேதம்.! வீடியோ உள்ளே.!