அந்தரத்தில் பறக்கும் வாகனங்கள்; ஓட்டுனர்களுக்கு மரண பீதி.. காரணம் என்ன?
அந்தரத்தில் பறக்கும் வாகனங்கள்; ஓட்டுனர்களுக்கு மரண பீதி.. காரணம் என்ன?
திடீரென சாலையில் அமைக்கப்பட்ட வேகத்தடை காரணமாக வாகனங்கள் அந்தரத்தில் பறக்கின்றன.
ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம், டெல்லியின் பிரதான பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது. இதனால் அங்கு தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் ஏராளம். நகரமயமாதல் காரணமாக, அங்கு பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
இதையும் படிங்க: கள்ளக்காதல் சந்தேகத்தில் 15 வயது சிறுவன் கொலை; நண்பருடன் சேர்ந்து இளைஞர் பயங்கரம்.!
இதனிடையே, அங்குள்ள கால்ப் வழிச் சாலையில், யு-டர்ன் அடிக்கும் பகுதிக்கு முன்பாக புதிதாக வேகத்தடை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக வேகத்தடை அமைக்கப்பட்டதாக தெரியவருக்குகிறது.
பறந்து செல்லும் வாகனங்கள்
பகல் நேரங்களில் வாகனங்கள் வேகத்தடையை எளிதில் அணுகி சென்றுவிடும் எனினும், இரவு நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சரியாக கவனிக்கும் அளவு வேகத்தடை என்பது இல்லை. இதனால் சாலையில் வரும் வேகமாக வரும் வாகனங்கள், வேகத்தடையில் ஏறி பறந்து பயணிக்கிறது.
இந்த சம்பவத்தின் பகீர் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. உரிய வெளிச்சம் இல்லாதது மற்றும் வாகன ஓட்டிகளின் அலட்சியம், வேகம் போன்றவை வேகத்தடையை மறைந்து இருக்கிறது. இதனால் வாகனங்கள் பறந்து பயணிக்கின்றன.
இதையும் படிங்க: அதிவேகத்தில் சோகம்; 4 சிறார்கள் உட்பட 7 பேர் பரிதாப பலி.. சாலையோர மரத்தில் கார் மோதி பயங்கரம்.!