மாற்று திறனாளி மாணவன் தனது எதிர்காலத்தை நினைக்காமல் கேரளாவுக்கு செய்த உதவி!. நெகிழ்ச்சி சம்பவம்!.
மாற்று திறனாளி மாணவன் தனது எதிர்காலத்தை நினைக்காமல் கேரளாவுக்கு செய்த உதவி!. நெகிழ்ச்சி சம்பவம்!.
கேரளாவில் பெய்த கனமழையின் காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சூழப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கேரள மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அங்கு ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் அவர்களின் உடமைகளை இழந்து தத்தளித்து வருகின்றனர். கேரள மக்களுக்கு சினிமா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் நிவாரண உதவி அளித்து வருகின்றனர்.
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாற்றுத்திறனாளி மாணவர், காது கேட்கும் கருவி வாங்க வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக அளித்துள்ளது நாடுமுழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யா எனும் காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவர், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்தார்.
பின்னர் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை சந்தித்து கேரள வெள்ள நிவாரண நிதிக்காக 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அளித்தார். மேலும் இந்த பணத்தை அந்த மாற்றுத்திறனாளி மாணவர் காது கேட்கும் கருவி வாங்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.