மாமியாரை கொடுமைப்படுத்திய மருமகள்! வைரலான வீடியோவால் முதல்வர் எடுத்த அதிரடி நடவடிக்கை!
Haryana cm takes action on arogant daughtet in law
ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தன்னுடன் செல்பி எடுக்க முயன்றவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன்பு வைரலாகி வந்தது. அதே முதல்வர் தற்போது எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தைச் சேர்ந்த நிவாஜ் நகர் கிராமத்தில் ஒரு பெண் தன் மாமியாரை கொடுமைப்படுத்தும் வீடியோவை பக்கத்து வீட்டுக்காரர் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் கட்டிலில் படுத்திருக்கும் வயதான மாமியாரை மருமகள் அடித்து கொடுமைப்படுத்துகிறார்.
அந்த வயதான மூதாட்டி இந்திய தேசிய சுதந்திரபடையில் பணியாற்றியவராம். அவருக்கு ஆண்டிற்கு 30000 ரூபாய் வரை பென்சன் வருகிறதாம். இந்த வீடியோவினை ட்விட்டரில் பார்த்த ஹரியானாவின் முதல் அமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “இந்த நிகழ்வு மிகவும் வருந்ததக்கது மற்றும் கண்டிக்கத்தக்கது. நாகரீகம் வளர்ந்துள்ள இந்த சமுதாயத்தில் இதுபோன்ற கொடுமைகள் நடைபெறுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த மருமகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்" என பதிவிட்டுள்ளார்.
முதல்வர் அறிவித்ததை போன்றே காவல்துறை அதிகாரிகள் அந்த மூதாட்டியின் இல்லத்திற்குச் சென்று அவருக்கு ஆறுதல் கூறியும் கொடுமைப்படுத்திய மருமகளை கைது செய்தும் சிறையில் அடைத்துள்ளனர்.